அல்ஜீரிய புரட்சிப்படைத் தலைவரை பிரெஞ்சுப்படையே கொன்றது - 70 ஆண்டுகளின் பின்னர் ஒப்புக்கொண்ட பிரான்ஸ்!

2 கார்த்திகை 2024 சனி 07:00 | பார்வைகள் : 13106
அல்ஜீரியாவில் தலைதூக்கியிருந்த புரட்சிப்படை ஒன்றின் தலைவரான Larbi Ben M'hidi இனை பிரெஞ்சுப் படையே கொன்றதாக 70 ஆண்டுகளின் பின்னர் பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
நேற்று அல்ஜீரிய போர் ஆரம்பித்து 70 ஆவது ஆண்டு நினைவுநாளின் போது ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்ஜீரியாவில் Front de libération nationale எனும் விடுதலைப் போராட்டக் குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் திகதி அன்று அக்குழுவின் தலைவர் Larbi Ben M'hidi உயிரிழந்தார். அவர் பிரெஞ்சு இராணுவக்கட்டுப்பாட்டில் இருக்கும் போது தற்கொலை செய்திருந்தார் என தெரிவிக்கப்பட்டது. அன்றைய நாளில் தான் அல்ஜீரிய போர் ஆரம்பமானது.
இந்த 70 ஆண்டுகளிலும் வரலாறு அப்படியே பதிவாகியிருந்தது. இந்நிலையில், நேற்று இந்த நினைவுநாளின் போது Larbi Ben M'hidi இனை பிரெஞ்சு இராணுவத்தினரே கொன்றதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஒப்புக்கொண்டுள்ளார். 'அல்ஜீரியாவின் மிகச்சிறந்த வீரர் அவர். தலமைக்கு கட்டுப்பட்டு பிரெஞ்சு இராணுவத்தினரால் அவர் படுகொலை செய்யப்பட்டார்!' என மக்ரோன் தெரிவித்தார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1