ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெர்மனி பிரஜைக்கு மரண தண்டனை...

1 கார்த்திகை 2024 வெள்ளி 13:50 | பார்வைகள் : 8096
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஜாம்ஸித் ஷர்மாத்திற்கு கடந்த 28-20-2024 ஆம் திகதி ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
இதனையடுத்து, ஜெர்மனியில் உள்ள 3 தூதரகங்களை உடனடியாக மூடுமாறு ஈரானுக்கு ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
69 வயதாகும் ஷர்மத் அமெரிக்காவில் வசித்து வந்தார். துபாய்க்கு கடந்த 2020-ம் ஆண்டு சென்றபோது ஈரான் பாதுகாப்புப்படையினரால் கடத்தப்பட்டார்.
கடந்த ஆண்டிலிருந்து நடைபெற்ற விசாரணையின் ஜெர்மனி அமெரிக்கா, சர்வதேச உரிமைகள் குழுக்களின் வாதங்கள் பொய்யானவை என நீதிமன்றத்தால் புறக்கணிப்பட்டது.
அதன் அடிப்படையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.
பிராங்பர்ட், ஹம்பர்க், முனிச் ஆகியவற்றில் உள்ள தூதரகங்களை மூட ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது. பெர்லின் நகரில் மட்டும் இயங்கும் எனத் தெரிவித்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1