குப்பை லொரியில் பயணித்து கவனம் ஈர்க்கும் டொனால்ட் ட்ரம்ப்!

1 கார்த்திகை 2024 வெள்ளி 09:18 | பார்வைகள் : 8936
அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப், குப்பை லொரியில் பயணித்து கவனம் ஈர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவரது ஆதரவாளர்களை குப்பைகள் என அதிபர் ஜோ பைடன் விமர்சித்த நிலையில் இந்த அதிரடி எதிர்ப்பை ட்ரம்ப் வெளிக்காட்டியுள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப், தனது பெயரை தாங்கிய போயிங் 757 ரக விமானத்தில் இருந்து தரையிறங்கி உடனடியாக வெள்ளை நிறத்தில் அவரது பெயருடன் தயாராக இருந்த குப்பை வண்டியில் பயணித்தார்.
இதன் மூலம் ஜோ பைடன் தெரிவித்த கருத்தை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தில் தனக்கு சாதகமாக ட்ரம்ப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
எப்படி உள்ளது எனது குப்பை லாரி? கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனுக்கு நான் கொடுக்கும் மரியாதை இது என ட்ரம்ப் தெரிவித்தார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1