நாளை முதல் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு!
31 ஐப்பசி 2024 வியாழன் 16:31 | பார்வைகள் : 17025
நாளை நவம்பர் 1 ஆம் திகதி முதல் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் குளிர்காலத்துக்கு ஏற்ற டயர்களை பயன்படுத்துவது கட்டாயமானதாகும்.

அதிகளில் பனிப்பொழிவைச் சந்திக்கும் 34 மாவட்டங்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாளை நவம்பர் 1 ஆம் திகதி முதல் 2025 மார்ச் 31 ஆம் திகதி வரை இந்த மாற்றம் நடைமுறையில் இருக்கும் எனவும், குளிர்காலத்துக்கு ஏற்ற, இலகுவில் வழுக்காத டயர்களை வாகனங்களில் பயன்படுத்த வேண்டும் அல்லது, அனைத்து பருவகாலத்துக்கும் ஏற்ற டயர்களை பயன்படுத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

M+S எனப்படும் சகதி மற்றும் பனியினை எதிர்கொள்ளும் திறன்கொண்ட டயர்கள் பொருத்தப்பட்டிருக்கவேண்டும் எனவும், பிற மாவட்டங்களில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குச் செல்பவர்களும் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan