சீனாவில் கத்திக்குத்து தாக்குதல் - 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் காயம்
29 ஐப்பசி 2024 செவ்வாய் 10:06 | பார்வைகள் : 10017
சீனாவின் ஹைய்டியன் மாவட்டத்தில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மூன்று சிறுவர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் வான்குவான்சுவாங் சாலை மற்றும் வானலியு சாலைகள் சந்திக்கும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஆரம்பபாடசாலையொன்றிற்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை வாயிலிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாடசாலைக்குள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்த மாணவர்களை சந்தேகநபர் தாக்கியுள்ளார். மூன்று மாணவர்களும் பெற்றோர் ஒருவரும் மாணவரை காப்பாற்ற முயன்ற பேஸ்போல் பயிற்றுனரும் காயமடைந்துள்ளனர்.
மாணவர்கள் இரத்தக்காயங்களுடன் நிலத்தில் விழுவதை பார்த்ததும் பெரும் குழப்பநிலை நிலவியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் ஆரம்ப பாடசாலைகள் உட்பட பல பகுதிகளில் கடந்த சில வருடங்களாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றது.
சம்பவம் தொடர்பில் ஐம்பது சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்,காயமமைடந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் மயங்கிய நிலையில் காணப்படுவதையும் குருதி வழிந்தோடுவதையும்,ஒருசிறுவனிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும் நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan