Paristamil Navigation Paristamil advert login

51 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

51 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

27 ஐப்பசி 2024 ஞாயிறு 13:18 | பார்வைகள் : 6539


ரஷ்ய எல்லைக்கு அருகில் உக்ரைனின் 51 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

உக்ரைனின் ட்ரோன்களை அழித்ததாக ரஷ்யா தினமும் அறிவித்து வருகிறது.

அந்த வகையில் 51 ட்ரோன்களை எல்லைக்கு அருகில் உள்ள பல பகுதிகளில் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. 

அவற்றில் 18 ட்ரோன்கள் உக்ரைனின் எல்லையில் இருந்து சுமார் 400 கிலோ மீற்றர்கள் தொலைவில் உள்ள Tambov பிராந்தியத்தில் வீழ்த்தப்பட்டன. 

16 ட்ரோன்கள் எல்லை நகரமான Belgorod பகுதியில் இடைமறைக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததாக டெலிகிராம் அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும் Oryol, Bryansk, Lipetsk மற்றும் Voronezh பகுதிகளில் ஏனைய ட்ரோன்களும் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் உக்ரேனிய துருப்புகள் தரைவழித் தாக்குதலை நடத்தி, பல நூறு சதுர கிலோமீற்றர் ரஷ்ய நிலப்பரப்பை ஆகத்து மாதம் கட்டுப்படுத்திய பகுதி ஒன்றிலும் மற்றொரு ட்ரோன் இடைமறிக்கப்பட்டது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்