இரண்டே நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்த ஜாம்பவான் வீரர்! ரியல் மாட்ரிட்டை நொறுக்கிய பார்சிலோனா
27 ஐப்பசி 2024 ஞாயிறு 09:10 | பார்வைகள் : 7795
லா லிகா தொடரில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது.
Santiago Bernabeu மைதானத்தில் நடந்த போட்டியில் பார்சிலோனா (Barcelona) மற்றும் ரியல் மாட்ரிட் (Real Madrid) அணிகள் மோதின.
முதல் பாதியில் இருதரப்பிலும் எந்த கோலும் விழவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் பார்சிலோனா அணி ருத்ர தாண்டவம் ஆடியது.
ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் ராபர்ட் லேவாண்டோவ்ஸ்கி (Robert Lewandowski) அபாரமாக கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து இரண்டு நிமிட இடைவெளியில் தலையால் முட்டி மீண்டும் அவர் கோல் அடித்தார்.
66வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட்டின் கைலியன் எம்பாப்பே கோல் அடித்தார். ஆனால் அது ஆஃப்சைடு என அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் அவர் தொடர்ந்து கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை பார்சிலோனா தடுத்தது.
பார்சிலோனாவின் லாமினே யாமல் (Lamine Yamal) 77வது நிமிடத்தில் சிறப்பாக சொல்லப்பட்டு கோல் அடித்தார்.
84வது நிமிடத்தில் பார்சிலோனாவின் ராபின்ஹா தனியாளாக பந்தை விரட்டிச் சென்று எளிதாக கோலாக மாற்றினார்.
கடைசி வரை ரியல் மாட்ரிட் அணியால் கோல் அடிக்க முடியாததால் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan