நடன இயக்குநர் ஜானி அதிரடி கைது!

19 புரட்டாசி 2024 வியாழன் 15:24 | பார்வைகள் : 6737
விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய டான்ஸ் மாஸ்டர் ஜானி, தெலுங்கு திரைத்துறையிலும் பிரபல நடன இயக்குநராக திகழ்கிறார். இவர் மீது இளம் பெண் நடனக் கலைஞர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அதில், ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்படிப்புக்குச் சென்ற இடங்களில் எல்லாம் ஜானி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தெலுங்கு, தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த புகாருக்குப் பின்னர், ஜானி தலைமறைவாக இருந்த நிலையில், அவரை ஹைதராபாத் காவல்துறை தொடர்ந்து தேடி வந்தது. இந்நிலையில் கோவாவில் தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்தனர். ராய்துர்காம் காவல் நிலையத்தில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1