Paristamil Navigation Paristamil advert login

கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி!

கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி!

17 புரட்டாசி 2024 செவ்வாய் 14:47 | பார்வைகள் : 6006


மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தீபாவளிக்கு விடாமுயற்சி திரைக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ''சமீபத்தில் தான் விடாமுயற்சி படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளில் நடித்து முடித்தோம். தொடர்ந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் மாதத்தில் விடாமுயற்சி திரைக்கு வரும்'' என்று கூறினார். அதனால் டிசம்பர் இறுதியில் கிறிஸ்துமஸ் தினத்தின் போது விடாமுயற்சி படம் திரைக்கு வரும் என்று தெரியவந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்