ராகவா லாரன்ஸ் 25வது படத்தின் கதை என்ன?
16 புரட்டாசி 2024 திங்கள் 14:38 | பார்வைகள் : 10769
நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25 வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ஒரு சூப்பர் ஹிட் பாலிவுட் படத்தின் ரீமேக் என்றும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் ரமேஷ் வர்மா என்ற பிரபல தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் இந்த படம் குறித்த சில கூடுதல் தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.
பாலிவுட்டில் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் லக்ஷயா நடிப்பில் உருவான ’கில்’ என்ற படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் தான் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள 25வது படம் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் கதை என்னவெனில் ஹீரோ மற்றும் அவரது நண்பர் தேசிய பாதுகாப்பு படையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில் ஹீரோ ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் ஹீரோயின் தந்தை மிகப்பெரிய பணக்காரர் என்பதால் காதல் கைகூடாமல் இருக்கும்.
இந்த நிலையில் ஹீரோயினுக்கு வேறு நபருடன் நிச்சயதார்த்தம் நடக்கும் நிலையில் உடனே உன்னை அழைத்துக் கொண்டு செல்கிறேன் என்று ஹீரோ கூறுகிறார். ஆனால் இப்போது வேண்டாம், நாளை நாங்கள் ரயிலில் ஊருக்கு போகிறோம், அப்போது அதே ரயிலில் நீங்கள் வாருங்கள், ரயிலில் இருந்து தப்பித்து விடலாம் என்று ஹீரோயின் கூறுகிறார்.
இந்த நிலையில் ஹீரோயின் மற்றும் அவரது குடும்பத்தினர் ரயிலில் ஏசி பெட்டியில் இருக்க, அதே ரயிலில் ஹீரோ, அவரது நண்பர் பயணிக்கின்றனர். இந்த நேரத்தில் திடீரென கொள்ளையர்கள் ரயிலுக்குள் புகுந்து விடுகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் ’கில்’ படத்தின் கதை.
இந்த படம் தான் தற்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan