பிரச்சாரத்திற்கு சென்ற ரணிலின் உலங்குவானூர்தி! திடீரென தரையிறங்கியது

15 புரட்டாசி 2024 ஞாயிறு 11:51 | பார்வைகள் : 5853
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அழைத்துச் சென்ற உலங்கு வானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 412 ரக உலங்குவானூர்தி பயணத்தில் ஈடுபட்டிருக்கொண்டிருந்த போது எப்பாவல பகுதியில் வைத்து திடீரென தரையிறக்கப்பட்டது.
எனினும் இதன்போது எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
இந்தநிலையில், அவசர தரையிறக்கத்திற்கான காரணம் குறித்து விமானப்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் உலங்கு வானூர்தியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
ஒரு மணி நேரத்தின் பின்னர், உலங்கு வானூர்தி மீண்டும் கொழும்புக்கு புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1