கொழும்பில் மகனை கொலை செய்துவிட்டு தந்தை தப்பியோட்டம்

12 புரட்டாசி 2024 வியாழன் 10:53 | பார்வைகள் : 5659
கல்கிஸ்ஸை ,பொருபன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தந்தையொருவர் கூரிய ஆயுதத்தால் மகனைத் தாக்கி கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
இரத்மலானை பொருபன பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய மகனே கொலை செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் மேலும் தெரியவருவதாவது, குடும்பத் தகராறு காரணமாக சந்தேக நபரான தந்தை தனது மனைவி மற்றும் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த மனைவி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1