Real Madrid தான் மிகச் சிறந்த கால்பந்து கிளப்...! ஜாம்பவான் புகழாரம்
12 புரட்டாசி 2024 வியாழன் 09:02 | பார்வைகள் : 5616
கால்பந்தாட்ட ஜாம்பவான் கிரிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) சமீபத்தில் ரியல் மாட்ரிட் கால்பந்து அணியை மிகச் சிறந்த கால்பந்து அணி என்று தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ, சமீபத்தில் மாட்ரிடில் நடந்த ஒரு நிகழ்வில், தனது கருத்தினை வெளிப்படுத்திய போது, ரியல் மாட்ரிட் (Real Madrid) அணியை "வரலாற்றிலேயே சிறந்த கால்பந்து கிளப்" என புகழ்ந்துள்ளார்.
தற்போது சவுதி அரேபியாவின் Al Nassr கால்ப்பந்தாட்ட கிளப்பின் கேப்டனாக இருக்கும் ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணியில் விளையாடிய காலத்தில் ஐந்து UEFA Champions League கோப்பைகளும் பல்வேறு லா லிகா (La Liga) வெற்றிகளையும் அடைந்தார்.
ரொனால்டோ 2009 முதல் 2018 வரை ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி, அந்நாட்டின் மிக முக்கியமான விளையாட்டு வீரராகவும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.
அவரது விளையாட்டு திறமையும் அணிக்கு கொண்டுவந்த வெற்றிகளும் ரியல் மாட்ரிட் அணியை உலகின் மிகச் சிறந்த அணி எனப் பாராட்டக் காரணமாக இருந்தன.
ரொனால்டோ தனது ரியல் மாட்ரிட் அனுபவத்தை "சிறந்த காலங்கள்" என்று விவரித்தார்.
அவருடைய மொத்த கோல்களில் ரியல் மாட்ரிட் அணியில் மட்டும் 450-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார்.
இந்த புகழுரையை ரொனால்டோ தெரிவித்துள்ளார் என்பது அவரது ரியல் மாட்ரிட் அணிக்கான பாசமும், அன்பும் என்றும் நிலைத்திருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan