“Major Missing” CSK அணியின் புதிரான பதிவு- சோகத்தில் சென்னை ரசிகர்கள்
12 புரட்டாசி 2024 வியாழன் 08:59 | பார்வைகள் : 7672
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் X தளப் பதிவு ஒன்று CSK ரசிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த பதிவில் “Major Missing” என குறிப்பிட்டு, விசில், சேப்பாக்கம் மைதானம், ஆகியவற்றுடன் சேர்த்து தோனியின் 7 நம்பர் ஜெர்சியையும் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே எதிர்வரும் ஐபிஎல் தொடரில் உடல்நிலை மற்றும் வயது காரணமாக விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில், “Major Missing” என்ற வார்த்தைகளுடன் தோனியின் 7 நம்பர் ஜெர்சியையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலர் அடுத்த சீசனில் தோனி விளையாட மாட்டார் என்பதையே சிஎஸ்கே அணியின் X தளப் பதிவு குறிப்பிடுவதாக தெரிவித்து வரும் நிலையில், பலர் “Major Missing” அப்படினு சிஎஸ்கே அணி நிர்வாகம் எதை தான் குறிப்பிடுறாங்கனு தெரியாமல் குழம்பி வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan