டிடிக்கு ஆபரேஷன்.. நடந்தது என்ன ?
11 புரட்டாசி 2024 புதன் 09:22 | பார்வைகள் : 10498
விஜய் டிவி பிரபலம் டிடிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக செய்தி வெளியான நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
எனக்கு கடைசி மூன்று மாதங்கள் கடினமானதாக இருந்தது, இரண்டு மாதங்களுக்கு முன்பு எனது முட்டியில் மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனது வலது முட்டியில் கடந்த 10 ஆண்டுகளில் 4 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுதான் கடைசி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்த இரண்டு மாதங்கள் எனக்கு மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது, அத்துடன் சில முன்னேற்றமும் இருந்தது, மிகவும் கடினமாக உழைத்தேன், இரண்டு மாத சிகிச்சைக்குப் பிறகு இதை நான் பதிவு செய்கிறேன். என்னை திரையில் ரசித்த மக்களும், எப்போதும் ஆதரவு அளிக்கும் ரசிகர்களும் எனது வலியை புரிந்து கொள்வார்கள் என்று இந்த பதிவை நான் செய்கிறேன்.
இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது நன்றி. எனது கடினமான நாட்களில் உங்களது அன்பும் ஆதரவு தான் என்னை மீட்டு கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது நான் திடமாக வருவேன் என நம்புகிறேன். எனது மருத்துவர்களுக்கு நான் முக்கியமாக நன்றி தெரிவிக்க வேண்டும்.
கடைசியாக ஒன்று, நான் எங்கேயாவது நடந்து செல்வதை பார்த்தால், எனக்காக நீங்கள் கடந்த 10 ஆண்டுகளில் வாழ்ந்து இருந்தீர்கள் என்றால், என்னிடம் வந்து ஒரு ஹாய் சொல்லுங்கள்.
தற்போது நான் வலுவடைந்து வருகிறேன், விரைவில் உங்கள் எல்லோரையும் சந்திப்பேன், புதிய முட்டியுடன் புதிய நான்’ என்று டிடி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் பெயரால் ஆகி வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan