இலங்கையில் அடுத்த 24 மணித்தியாலங்களில் காலநிலையில் மாற்றம்

11 ஐப்பசி 2024 வெள்ளி 16:27 | பார்வைகள் : 4531
அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பரவலாக பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மழைக் காலங்களில் மின்னல் மற்றும் காற்று வீசும் நிலையிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1