இலங்கை மக்கள் மீதான அழுத்தங்கள் குறைக்கப்படும் - ஜனாதிபதி உறுதி

4 ஐப்பசி 2024 வெள்ளி 06:05 | பார்வைகள் : 11538
சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அழுத்தங்களை குறைப்பதற்குமான மாற்று தீர்வுக்காக முன்னின்று செயற்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து உரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள மாற்று அணுகுமுறைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் தமது இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தூதுக்குழுவின் பிரதானி கலாநிதி பீட்டர் ப்ரூவர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட தரப்பினர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1