பரிஸ் : இளம் பெண் மீது பாலியல் வல்லுறவு..!!

28 புரட்டாசி 2024 சனி 09:50 | பார்வைகள் : 11120
24 வயதுடைய பெண் ஒருவர் பரிஸ் 3 ஆம் வட்டாரத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தாக்குதலாளி தப்பி ஓடிய நிலையில், அவர் தேடப்பட்டு வருகிறார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை Passage des Ménétriers பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 4.30 மணி அளவில் பெண் ஒருவர் வீதியின் அருகே விழுந்து கிடப்பதை பார்த்த பாதசாரி ஒருவர், காவல்துறையினரை அழைத்துள்ளார்.
24 வயதுடைய குறித்த பெண்ணை, நபர் ஒருவர் தாக்கி அவரை கீழே விழுத்தி பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார். அவர் மயங்கி விழுந்ததுடன், அவரது முகத்தில் தாக்கப்பட்ட காயமும் இருந்துள்ளது.
அவர் உடனடியாக மீட்கப்பட்டு பரிஸ் 4 ஆம் வட்டாரத்தில் உள்ள Hôtel-Dieu மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் தப்பி ஓடியுள்ள நிலையில், அவர் தேடப்பட்டு வருகிறார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1