புலி வேடமிட்ட வங்கதேச ரசிகரை தாக்கிய இந்திய ரசிகர்கள் - மழையால் தடைபட்ட ஆட்டம்!
28 புரட்டாசி 2024 சனி 06:54 | பார்வைகள் : 5828
டெஸ்ட் போட்டியை காண வந்த வங்கதேச ரசிகர் மீது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து போட்டியில் களமிறங்கியது.
முதல் நாளான இன்று 35 ஓவர்கள் பந்து வீசப்பட்டுள்ள நிலையில் மழை குறுக்கிட்டுள்ளதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 107 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை காண வந்த புலி வேடமிட்ட வங்கதேச ரசிகர் மீது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரசிகர்கள் தன்னுடைய கையில் இருந்த கொடியை பிடுங்கி வீசி சரமாரியாக தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து காயமடைந்த வங்கதேச ரசிகர்களை மீட்டு பொலிஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan