Paristamil Navigation Paristamil advert login

பெய்ரூட்டில் கடும் தாக்குதலை நடத்தும் இஸ்ரேல் 

பெய்ரூட்டில் கடும் தாக்குதலை நடத்தும் இஸ்ரேல் 

28 புரட்டாசி 2024 சனி 06:32 | பார்வைகள் : 7743


ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிப்பதே இஸ்ரேல் நாட்டில் குறிக்கோளாக கொண்டு தாக்குதல்களை மேற்கொள்கின்றது.

ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசான் நஸ்ரல்லாவை இலக்குவைத்தே லெபனான் - பெய்ருட்டில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்களை மேற்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தினை இலக்குவைத்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேல், நஸ்ரல்லா கொல்லப்பட்டாரா என்பதை உடனடியாக தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா அமைப்பின் வலுவிடமான டகியாவில் பல கட்டிடங்களை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் 91 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

வர்த்தக‌ விளம்பரங்கள்