பரிஸ் : காவல்துறை வீரர் காயம்... ஒருவர் கைது!

25 புரட்டாசி 2024 புதன் 16:21 | பார்வைகள் : 7728
நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்டபோது தாக்குதல் மேற்கொண்டதில் காவல்துறை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. Boulevard Haussmann பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் ஒருவர் திடீரென குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்த தொடங்கினார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்னர் காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டு அழைக்கப்பட்டனர்.
விரைந்து வந்த காவல்துறையினர், குறித்த நபரை சரணடையும் படி கோரினர். கையில் கத்தி மற்றும் திருப்பிலி (ஸ்குரூ ட்ரைவர்) போன்றவற்றை வைத்துக்கொண்டு அவர் அச்சுறுத்தலில் ஈடுபட்டிருந்தார்.
அவரை மடக்கிப்பிடித்து கைது செய்ய முற்பட்டபோது, அவர் காவல்துறை வீரர் ஒருவரின் காலை கத்தியால் இரண்டு தடவைகள் வெட்டியுள்ளார். இதில் அவர் காயமடைந்துள்ளார்.
இருந்தபோதும், அதனை சமாளித்து அவரைக் கைது செய்தனர்.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1