"இந்த அரசாங்கத்திற்கு எதிர்காலம் இல்லை, இது இடைக்காலம்" Laurent Jacobelli
23 புரட்டாசி 2024 திங்கள் 09:27 | பார்வைகள் : 8619
பிரான்சில் Barnier அவர்கள் தலைமையில் புதிய அரசாங்கம் கடந்த சனிக்கிழமை (21/09) அறிவிக்கப்பட்டதில் இருந்து எதிர்கட்சிகள் பல்வேறு பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர், இதில் ஒரு கருத்தாக தீவிர வலதுசாரி கட்சியான Rassemblement national (RN) கட்சியின் பேசவல்ல அதிகாரியும் நாடாளுமன்றத் உறுப்பினருமான Laurent Jacobelli மேல் குறிப்பிட்ட கருத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் "பிரதமரின் பொதுக் கொள்கை உரையின் போதும், வரவுசெலவு திட்டத்தின் அறிக்கையின் போதும் தேசிய பேரணி மிகவும் விழிப்புடன் இருக்கும்" என தெரிவித்த அவர் இன்று கூடும் அமைச்சர்களும் Barnier தலைமையிலான அரசும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த மக்களை புறம் தள்ளி நடக்கும் சம்பவம்" என வர்ணித்துள்ளார்.
பிரதமர் Barnier தலைமையிலான அரசாங்கம் பெரும்பாண்மை இல்லாத நிலையில் இருப்பதால் அரசைக் கவிழ்க்கும் முயற்சிகளும், அவர்கள் கொண்டு வரும் பிரேரணைகளை நீர்த்துப் போகச் செய்யும் செயல்களும் இனிவரும் காலங்களில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிகழும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan