காசா-லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் - 44 பேர் கொலை
22 புரட்டாசி 2024 ஞாயிறு 05:25 | பார்வைகள் : 6680
லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசா உடனான போர் தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேல் மீது லெபனான் 150க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவு தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி வழங்கும் விதமாக லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை முன்னெடுத்தது.
இந்த தாக்குதலில் 3 குழந்தைகள், 7 பெண்கள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாக நாட்டின் சுகாதார அமைச்சர் Firas Abiad தெரிவித்துள்ளார்.
மேலும் படுகாயமடைந்த 68 பேரில் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், லெபனான் மற்றும் காசா மீது கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல் படி, லெபனான் தலைநகர் பெய்ரூட்(Beirut) மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த படை தளபதி இப்ராஹிம் அகில்(Ibrahim Aqil) கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan