ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - இதுவரை வெளியான முடிவுகளின்படி முன்னிலை வகிக்கும் அனுர
21 புரட்டாசி 2024 சனி 20:42 | பார்வைகள் : 14453
இலங்கையில் நடைபெற்று முடிந்த 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
அதற்கமைய தபால் மூல வாக்குகளின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது.
இதுவரை வெளியான தபால் மூல வாக்குகள் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க சுமார் 60 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதுவரை வெளியான காலி, திருகோணமலை, மொனராகலை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அளிக்கப்பட்டிருந்த தபால் மூல வாக்குகளில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க பெற்றுக் கொண்டுள்ளார்.
அவர் பெற்றுக் கொண்டுள்ள 90,857 வாக்குகள் எண்ணப்பட்டுள்ள மொத்த தபால் வாக்குகளில் 60. 21வீதம் ஆகும்.
அதனையடுத்து சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். அவர் பெற்றுக் கொண்டுள்ள 27,800 வாக்குகள் இதுவரை எண்ணப்பட்டுள்ள தபால் மூல வாக்குகளில் 18.42 வீதம் ஆகும்.
இதுவரை எண்ணப்பட்டுள்ள தபால் மூல வாக்குகளில் 26,162 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, 17.34 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாஸ முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan