2026-ல் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவது உறுதி - ராஜேந்திர பாலாஜி பேச்சு

13 ஆவணி 2024 செவ்வாய் 03:23 | பார்வைகள் : 5862
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி கூறியதாவது,
தி.மு.க. கூட்டணி ஒரு மாயை.அது எப்போது வேண்டுமானாலும் உடைந்து சிதறும். அ.தி.மு.க. தனித்து போட்டியிட தயார். தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா? . 2026-ல் நிச்சயமாக அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும்;. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவது உறுதி. தி.மு.க.வுக்கு தனியாக வாக்கு வங்கி கிடையாது. அ.தி.மு.க. அழிவின் விளிம்பு வரை சென்றாலும், கடைசி நேரத்தில் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1