'மூக்குத்தி அம்மன்' 2 படத்தை இயக்க போவது இந்த இயக்குனரா?
10 ஆவணி 2024 சனி 11:36 | பார்வைகள் : 7201
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ’மூக்குத்தி அம்மன் 2’ படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’மூக்குத்தி அம்மன்’ வரைபடம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ’மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் அம்மன் கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும் இந்த படத்தை இயக்குவது யார் என்று என்ற கேள்வி எழுந்தது.
ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி ’மாசாணி அம்மன்’ என்ற திரைப்படத்தை த்ரிஷாவை வைத்து இயக்க இருப்பதாக கூறப்பட்டதால் ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தை அவர் இயக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி சுந்தர் சி இந்த படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’அரண்மனை 4’ என்ற திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் ’மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்குவதற்கு அவர்தான் சரியான நபர் என்றும் இன்னொரு 100 கோடி ரூபாய் வசூல் படம் தயார் என்றும் கோலிவுட் திரையுலகில் கூறப்பட்டு வருகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan