இலங்கை ஜனாதிபதி தேர்தல்! நாமல் - சுமந்திரன் இடையில் சந்திப்பு
10 ஆவணி 2024 சனி 11:07 | பார்வைகள் : 5205
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரனுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வடக்கு மாகாண பொறுப்பாளர் கீதாநாத் காசிலிங்கம் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஸ வெற்றி பெறும் பட்சத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அந்த பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாக M.A.சுமந்திரனிடம் நாமல் ராஜபக்ஸ தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
நாளைய தினம் கூடவுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி பதிலை வழங்குவதாக M.A.சுமந்திரனிடம் நாமல் ராஜபக்ஸவிடம் கூறியதாக கீதாநாத் காசிலிங்கம் தெரிவித்தார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan