Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ஜனாதிபதி தேர்தல் - கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தல் - கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

8 ஆவணி 2024 வியாழன் 14:49 | பார்வைகள் : 6135


இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கு 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்டுப்பாணம் செலுத்தும் காலம் எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்