பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வாருங்கள் - மஹிந்த அழைப்பு
8 ஆவணி 2024 வியாழன் 13:54 | பார்வைகள் : 14467
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை விட்டுப் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) புதன்கிழமை காலை இடம்பெற்ற “ 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பில்” ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் 1970ஆம் ஆண்டு அரசியலிற்குள் நுழைந்தேன். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கிறேன். எனது அனுபவத்தின்படி கூறுகின்றேன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக எமது கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார்.
எனவே, கட்சியை விட்டுப் பிரிந்து சென்றவர்களை நாட்டிற்காகவும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காகவும் கடந்த காலங்களைப் போன்று எம்முடன் இணைந்து செயற்பட நாம் அழைக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan