பற்றி எரியும் நாடு! டி20 உலகக்கிண்ணம் நடைபெறுமா...?
6 ஆவணி 2024 செவ்வாய் 09:17 | பார்வைகள் : 5755
வங்காளதேச நாட்டில் நெருக்கடியான சூழல் நிலவுவதால், அங்கு மகளிர் டி20 உலகக்கிண்ணத் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் 3ஆம் திகதி தொடங்குகிறது. வங்காளதேசம் இந்த தொடரை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது அங்கு அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் வங்காளதேசத்தில் அரசியல் அமைதியின்மை சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக மாற்று வழிகளை ஆராய ஐசிசிக்கு கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை வங்காளதேசத்தில் தொடரை நடத்தும் சூழல் இல்லை என்று முடிவானால், ஐசிசியின் அடுத்த தேர்வு இந்தியாவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி முன்னணியில் இருக்கும் அதே வேளையில், ஐசிசி மற்ற சாத்தியமான இடங்களையும் பரிசீலித்து வருகிறது.
அதாவது இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் சாத்தியமான மாற்றுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan