உலகின் பணக்கார கிரிக்கெட் வீராங்கனை யார் தெரியுமா...?
3 ஆவணி 2024 சனி 09:27 | பார்வைகள் : 5319
கிரிக்கெட் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கக்கூடிய, நண்பர்களுடன் விளையாடக்கூடிய ஒரு விளையாட்டு.
இந்தியா, பாக்கித்தான், இலங்கை போன்ற நாடுகளில் கிரிக்கெட் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது.
பொதுவாக, விளையாட்டு துறையில் பணம் சம்பாதிப்பது என்பது சாதாரண விடயமல்ல.
ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் ஆண் வீரர்கள், பெண் வீராங்கனைகள் என யாராக இருந்தாலும் பணத்தில் விளையாடலாம்.
அதற்கு அவர்கள் சிறந்து விளங்கி, ஆட்டத்தின் திறனை சிறப்பாக கொண்டு செல்லவேண்டும்.
அந்தவகையில், உலகின் பணக்கார கிரிக்கெட் வீராங்கனை யார் என்றும் அவரின் சொத்துமதிப்பு குறித்தும் பார்க்கலாம்.
உலகின் பணக்கார கிரிக்கெட் வீராங்கனை ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி(Ellyse Perry).
16 வயதில் தேசிய கிரிக்கெட் அணி மற்றும் தேசிய கால்பந்து அணிக்காக அறிமுகமானார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் இளைய ஆஸ்திரேலியர் மற்றும் ஐசிசி மற்றும் ஃபிஃபா உலகக் கோப்பை இரண்டிலும் தோன்றிய முதல் பெண்மணி ஆவார்.
டி20 போட்டிகளில் இணைந்து 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை குவித்த முதல் வீராங்கனை ஆவார்.
கிரிக்கெட், கால்பந்து என இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு பல உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார்.
விளையாட்டுகளில் திறமையுடன் செயல்படும் இவர், விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை மூலம் பெரும் வருமானத்தை ஈட்டி வருகிறார்.
மொத்தத்தில் இவர் 14 மில்லியன் டாலர் சொத்துமதிப்பு கொண்டு பணக்கார கிரிக்கெட் வீராங்கனைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan