பிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்களா?
4 புரட்டாசி 2024 புதன் 08:39 | பார்வைகள் : 7630
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு வருடங்களாக வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில் எட்டாவது சீசன் வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பக்கம் கமல்ஹாசனுக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப் போவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னொரு பக்கம் வழக்கம் போல் நடிகர், நடிகை, தயாரிப்பாளர், காதல் ஜோடி, திருமணமான தம்பதிகள் என பிக் பாஸ் போட்டியாளர்களின் லிஸ்ட் களைகட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக ’மேயாத மான்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் ’பாரதி கண்ணம்மா’ உட்பட சில சீரியல்கள் நினைத்த நடிகர் அருண் செல்கிறார் என்பது கூறப்படுகிறது. இவர் பிக் பாஸ் ஏழாவது சீசன் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் காதலர் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களையும் ரிவ்யூ செய்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் ஒரு போட்டியாளர் என்றும், அவர் மட்டுமின்றி வைல்ட் கார்டு என்ட்ரியாக அவரது மனைவியின் நடிகை மகாலட்சுமியும் கலந்து கொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் ’தமிழும் சரஸ்வதியும் ’ சீரியலில் நடித்த தீபக் பிக்பாஸ் போட்டியாளராக செல்ல இருப்பதாகவும் அதே போல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோயா மற்றும் அவரது காதலர் டிடிஎப் வாசன் ஆகிய இருவரும் காதல் ஜோடியாக பிக் பாஸ் வீட்டில் வலம் வரப்போவதாகவும் புறப்படுகிறது.
மேலும் விஜய் டிவி பிரபலங்களான மாகாபா ஆனந்த், ஜாக்லின் உள்ளிட்டோரும் போட்டியாளர்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan