107 கிலோ போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது!
2 புரட்டாசி 2024 திங்கள் 21:00 | பார்வைகள் : 16780
பிரெஞ்சு தீவான Martinique இல் இருந்து சாள்-து-கோல் விமான நிலையத்துக்கு புறப்பட தயாரான தம்பதியினர் இருவர் 107 கிலோ கொக்கைன் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்சில் கடல்கடந்த நிர்வாகப்பிரிவான Martinique தீவின் Fort-de-France விமான நிலையத்தில் இருந்து தம்பதியினர் இருவர் புறப்பட தயாராக இருந்த நிலையில், விமான நிலையத்தில் கடமைபுரியும் சுங்கவரித்துறையினர், தம்பதியினர் மீது சந்தேகம் கொண்டு அவர்களது பயணப்பெட்டிகளை சோதனையிட்டனர்.
அதன் போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 107 கிலோ கொக்கைன் போதைப்பொருளை பிரித்து ஐந்து பெட்டிகளில் அடைத்து வைத்திருந்துள்ளனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டதுடன், வழக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு (l’Office antistupéfiants (Ofast) மாற்றப்பட்டது.
கைதான இருவரும் 51 மற்றும் 49 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan