கார்த்தியின் படத்தில் இணைந்த கமல்
2 புரட்டாசி 2024 திங்கள் 15:29 | பார்வைகள் : 6693
கார்த்தி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் சூர்யா அவருக்கு தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
கார்த்தி நடித்த ’மெய்யழகன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோவையில் நடந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது இந்த நிலையில்
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’நான் போகிறேன்’ மற்றும் ’யாரோ இவன் யாரோ’ என தொடங்கும் இரண்டு பாடல்களை உலகநாயகன் கமல்ஹாசன் பாடியுள்ளார். கார்த்தி படத்தில் கமல்ஹாசன் இரண்டு பாடல்கள் பாடியுள்ளது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் நடிகர் சூர்யா இதற்கு தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். ’மெய்யழகன்’ பாடல்களுக்கு தனது அருமையான குரலை வழங்கிய அண்ணா அவர்களுக்கு நன்றி. அவரது மெல்லிய குரல், நம்மை உணர்ச்சிகளின் உலகத்திற்கே அழைத்துச் செல்லும். உங்கள் அன்பு மற்றும் ஆதரவால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளோம்’ என்று சூர்யா தெரிவித்துள்ளார். நேற்று வெளியான இந்த பாடல் கமல்ஹாசனின் எமோஷனல் குரலில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, சரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் நிலையில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில், சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள க்ஷ்’மெய்யழகன்’ திரைப்படம், இசை வெளியீட்டிற்கு பின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan