யாழ்ப்பாணம் - சென்னைக்கு இடையிலான விமான சேவை அதிகரிப்பு
2 புரட்டாசி 2024 திங்கள் 15:22 | பார்வைகள் : 11939
சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது.
சென்னையில் இருந்து நேற்றைய தினம் பயணத்தை ஆரம்பித்த விமானமானது 52 பயணிகளுடன் பிற்பகல் 3.07 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதன்போது பயணிகளை வரவேற்கும் முகமாக மங்கள விளக்கு ஏற்றல், வரவேற்பு நடனம், நினைவுப் பரிசில்கள் வழங்கல், கேக் வெட்டுதல் மற்றும் விருந்தினர்களின் உரை என்பன இடம்பெற்றன.
நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி, விமானப்படை அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பதவிநிலை அதிகாரிகள், பயணிகள் என பலர் கலந்துகொண்டனர்.
சென்னைக்கும் , யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் இதுவரை காலமும், அலையன்ஸ் ஏயார் (Alliance Air) விமான சேவை இடம்பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் முதல் இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனமும் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
அதனால் சென்னைக்கும் , யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் நேற்று முதல் இரு விமான சேவைகள் நடைபெறுகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan