மிஸ்ஸிஸிப்பியில் பேருந்து கவிழ்ந்து விபத்து -6 பேர் பலி, 37 பேர் காயம்
1 புரட்டாசி 2024 ஞாயிறு 09:19 | பார்வைகள் : 6547
அமெரிக்காவில் மிஸ்ஸிஸிப்பி நெடுஞ்சாலையில் மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, வாரன் கவுண்டியில் உள்ள போவினா அருகே சாலையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும், 37 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் டயர் செயலிழந்ததால் விபத்து நேர்ந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும், இந்த பேருந்து Autobuses Regiomontanos மூலம் இயக்கப்பட்டது தெரிய வந்தது.
இதற்கிடையில் உயிரிழந்தவர்களில் 6 வயது சிறுவனும், அவரது 16 வயது சகோதரியும் அடங்குவதாக வாரன் கவுண்டி Coroner Doug Huskey தெரிவித்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் காயமடைந்த 37 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan