பிக் பாஸ் 8க்கான போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் ?
31 ஆவணி 2024 சனி 15:27 | பார்வைகள் : 9927
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன் களையும் விமர்சனம் செய்தவர் தற்போது அந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக உள்ளே செல்ல இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் 8-வது சீசன் ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.
’பாரதி கண்ணம்மா’ அருண், மாகாபா, ஜாக்லின் உள்ளிட்ட சிலர் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பிக் பாஸ் 8க்கான போட்டியாளர்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதுமே முதல் நாளே தனது விமர்சனத்தை இவர் தொடங்கி விடுவார் என்பதும் காரசாரமாக இவர் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்து பேசும் போது பரபரப்பு ஏற்படும் என்பது தெரிந்ததே.
அது மட்டும் இன்றி திடீரென சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தது, பண மோசடி புகாரில் கைது செய்யப்பட்டது உட்பட பல பரபரப்புகளை ஏற்படுத்திய ரவிந்தர், பிக் பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan