கூலி படத்தின் மூலம் முடிவுக்கு வந்த 38 ஆண்டு காத்திருப்பு ...
31 ஆவணி 2024 சனி 15:20 | பார்வைகள் : 13631
முடிவுக்கு வந்த 38 ஆண்டு காத்திருப்பு.. ரஜினியின் கூலி - ராஜசேகராக கலக்கப்போகும் "உயர்ந்த மனிதன்"!
Coolie Update : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் அப்டேட்டுகள் இப்போது தொடர்ச்சியாக வெளிவர துவங்கியுள்ளது.
"வேட்டையன்" திரைப்பட பணிகளை முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இப்போது அப்படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்துள்ளார். அதே நேரம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" திரைப்பட பணிகளையும் அவர் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தபடி, தினமும் இப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது. அதன்படி பிரபல மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் முதல் முறையாக தமிழ் திரையுலகில் "கூலி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
அதேபோல தமிழ் திரை உலகை பொறுத்தவரை முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இந்த "கூலி" திரைப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறார் தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா. அதே நேரம் அவர் ஏற்கனவே ஒரு தெலுங்கு திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அண்மையில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து அட்டகாசமான ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்ட பிரபல நடிகை மற்றும் பாடகியுமான சுருதிஹாசனும் "கூலி" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருக்கிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக அவர் நடித்து வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகிறது. இருப்பினும் இதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழுவிடம் இருந்து வெளியாகவில்லை.
இந்நிலையில் சுமார் 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இந்த திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார் நடிகர் சத்யராஜ். ஏற்கனவே பல திரைப்படங்களில் ரஜினியோடு இணைந்து நடிக்க சத்யராஜை அனுகிய போது, பல காரணங்களால் அவர் அந்த படங்களில் நடிக்க முடியாமல் போன நிலையில், தற்போது அந்த விஷயத்தை லோகேஷ் கனகராஜ் சாதித்து காட்டியுள்ளார். ராஜசேகர் என்கின்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் கூலி படத்தில் நடிக்க உள்ள நிலையில், அவருடைய First Look போஸ்டர் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan