பொருட்கள் விற்பனைசெய்யும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்த மிஸ் பிரான்ஸ் அழகி!

29 ஆவணி 2024 வியாழன் 18:23 | பார்வைகள் : 9115
2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரான்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Eve Gilles, அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இணையமூடாக விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அவரது இந்த நிறுவனத்தில் நாட்குறிப்பு புத்தகங்கள், தண்ணீர் போத்தல்கள், பேனைகள், தேநீர் குவளைகள், நகைகள், பெண்களுக்கான டி.சேர்ட்கள் உள்ளிட்ட பல பொருட்களை விற்பனை செய்கிறார். அனைத்து பொருட்களிலும் ‘Miss France' எனும் இலட்சினை பதிக்கப்பட்டிருக்கும்.
முதற்கட்டமாக பிரான்சுக்குள் விற்பனை செய்யப்பட உள்ள இந்த பொருட்கள், விரைவில் உலகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
செப்டம்பர் 3 ஆம் திகதி முதல், boutique-miss-france. fr எனும் இணையத்தளம் செயற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1