'கோட்' இரண்டாம் பாகம் உருவாகிறதா?
29 ஆவணி 2024 வியாழன் 09:20 | பார்வைகள் : 5612
தளபதி விஜய் தற்போது ’கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவர் ’தளபதி 69’ படத்தை முடித்தவுடன் முழுமையாக அரசியலில் குதிக்க உள்ளார் என்றும் அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ’கோட்’ படத்தின் கிளைமாக்ஸில் இரண்டாம் பாகத்திற்குரிய காட்சிகள் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக ’கோட்’ திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு மூன்று மணி நேரத்திற்குள் ரன்னிங் டைம் இருந்த நிலையில் தற்போது மீண்டும் சென்சார் செய்யப்பட்டு 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ரன்னிங் டைம் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இரண்டாம் முறை சென்சார் செய்யப்பட்ட போது ப்லூபர்ஸ் வீடியோ மற்றும் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தொடக்க காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இரண்டாம் முறையாக சென்சார் செய்யப்பட்ட பின்னர் ’கோட்’ படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் மற்றும் 14 நொடி என மாறி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது தெரிந்தது.
செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘கோட்’ திரைப்படத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan