அவுஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களுக்கான கட்டுப்பாடு நிர்ணயிப்பு

28 ஆவணி 2024 புதன் 08:13 | பார்வைகள் : 8951
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா 2,70,000 சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கும் என அந்த நாட்டின் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
பல நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான சிறந்த இடமாக அவுஸ்திரேலியா காணப்படுகின்றது.
அவுஸ்திரேலியா சர்வதேச மாணவர்களின் சேர்க்கையை குறிப்பிட்ட வரம்புக்குள் கொண்டு வந்து சர்வதேச கல்வி துறையை வலிமையாக்கவும், நிலைத்தன்மை கொண்டதாக மாற்றவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமையில் (ஒகஸ்ட் 27, 2024) அவுஸ்திரேலிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படுவதற்கு உட்பட்ட, 2025ம் ஆண்டு 2,70,000 சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான தேசிய திட்டமிடல் நிலை(NPL) அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையின் மூலம் சில பல்கலைக்கழகங்கள் அடுத்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மாணவர்களை கொண்டு இருக்கலாம். மற்ற பல்கலைக்கழகங்கள் அதை விட குறைவாக கொண்டு இருக்கலாம் என்று கல்வித்துறை அமைச்சர் Jason Clare செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தரவுகளின் படி, 2023ம் ஆண்டில் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சர்வதேச மாணவர்கள் Aus$42 பில்லியன் (US$28 பில்லியன்) மதிப்பு கொண்டவர்களாக இருந்துள்ளனர்.
2023 ஜூன் 30 வரையிலான நிதியாண்டில் மட்டும் 5,77,000 சர்வதேச மாணவர்களுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் மாணவர் விசாவை வழங்கியுள்ளனர்.
சுரங்கங்களுக்கு பிறகு சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தொழில் துறையாக கருதப்படுகின்றனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1