பிரபலமான பனி குகை இடிந்து விழுந்து விபத்து.....
27 ஆவணி 2024 செவ்வாய் 06:41 | பார்வைகள் : 7776
தென்கிழக்கு ஐஸ்லாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஜோகுல்சர்லோன் என்ற பனி குகை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
25 பேர் கொண்ட சுற்றுலாக் குழு ஒரு வழிகாட்டியுடன் சேர்ந்து பனிப்பாறை ப்ரீடாமெர்குர்ஜோகுல்லுக்கு சென்றபோது, திடீரென பனி குகை இடிந்து விழுந்துள்ளது.
குறித்த விபத்தில், பனிக்கட்டியின் அடியில் 4 பேர் சிக்கியதாகவும், பின்னர் இருவர் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்திருந்த நிலையில், அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு நபர் ஹெலிகாப்டர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைதொடர்ந்து, காணாமல் போன மேலும் இருவரையும் தேடும் பணியை நேற்று தொடங்கிய மீட்புப் படையினர், இன்றும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
நிலைலமை கடினமாக உள்ள சூழலில் ஏராளமான மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan