ஒலிம்பிக்கில் கவனமீர்த்த வெள்ளிக்குதிரை மக்கள் பார்வைக்கு வருகிறது..!

26 ஆவணி 2024 திங்கள் 16:20 | பார்வைகள் : 8464
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பநாள் நிகழ்வின் போது அனைவரது கவனத்தைம் ஈர்த்த வெள்ளிக்குதிரை மக்கள் பார்வைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
அலுமினிய உலோகத்தினால் செய்யப்பட்ட இந்த குதிரை சென் நதியில் ஒலிம்பிக் கொடியை சுமந்துகொண்டு வலம் வந்திருந்தது. இந்த குதிரை ஓகஸ்ட் 29 ஆம் திகதி முதல் செப்டம்பர் 8 ஆம் திகதி வரை பரிஸ் நகரசபையில் காட்சிக்கு வைக்கப்படும் என இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை எவ்வித கட்டணங்களும் இன்றி குறித்த நாட்களில் இலவசமாக பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1