Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

26 ஆவணி 2024 திங்கள் 04:39 | பார்வைகள் : 8258


இந்தோனேசியாவில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது.

லட்சக்கணக்கான மக்கள் மலைப் பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு அருகில் வசித்து வருவதால் பேரிடர் காலங்களில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் அதிகமாக உள்ளது.

இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணம், டெர்னேட் தீவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

ருவா கிராமத்தில் குடியிருப்புகளை வெள்ளம் அடித்துச் சென்றதுடன், பிரதான சாலை மற்றும் அந்த கிராமத்திற்கான தரைவழி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேற்றில் புதைந்தன.

இந்நிலையில், இந்தோனேசியா கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மாயமானவர்களை  மீட்புக் குழு தேடி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்