நெடுந்தீவில் வளர்ப்பு பன்றி கடித்து வயோதிபப் பெண் பலி

25 ஆவணி 2024 ஞாயிறு 11:20 | பார்வைகள் : 12289
நெடுந்தீவில் பன்றி கடித்ததால் படுகாயமுற்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி சனிக்கிழமை (24) அதிகாலைவேளை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவு 15ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த நாகமுத்து லட்சுமி (வயது 80) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் சனிக்கிழமை மாலை வீட்டுக்கு வெளியே வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். இதன்போது அங்கிருந்த வளர்ப்புப் பன்றி ஒன்று அவரை கொடூரமாகத் தாக்கியது. இருதயம் வெளியே தெரியும் அளவுக்கு கடித்துக் குதறியது.
இதனால் படுகாயமடைந்த குறித்த வயோதிபப் பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1