மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரைட்டன் அணி
25 ஆவணி 2024 ஞாயிறு 07:37 | பார்வைகள் : 5301
பிரீமியர் லீக் போட்டியில் பிரைட்டன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது.
மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) மற்றும் பிரைட்டன் (Brighton) அணிகள் மோதிய பிரீமியர் லீக் போட்டி Falmer மைதானத்தில் நடந்தது.
பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தில், பிரைட்டன் வீரர் டேனி வெல்பெக் (Danny Welbeck) 32வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
மிடோமா பாஸ் செய்த பந்தை வெல்பெக் சறுக்கி விழுந்து உதைத்து வலைக்குள் தள்ளினார்.
33வது நிமிடத்தில் மான்செஸ்டர் நட்சத்திர வீரர் மார்கஸ் ராஷ்ஃபோர்டு தலைமுட்டிய பந்தை எதிரணி கோல் கீப்பர் தடுத்தார். ஆனால், கீழே படுத்தப்படியே மீண்டும் அவர் தனது காலால் உதைத்து கோல் போட்டார்.
எனினும் நடுவர் பரிசோதித்தபோது அது ஆஃப் சைடு கோல் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் மான்செஸ்டர் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
அதன் பின்னர் 60வது நிமிடத்தில் புயல்வேகத்தில் பந்தை கடத்தி சென்ற அமாட் டியல்லோ (மான்செஸ்டர் யுனைடெட்), அதிவேகமாக வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது.
ஆட்டம் 1-1 என 90 நிமிடங்கள் வரை சமநிலையில் இருந்தது. பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் (7 நிமிடங்கள்) பிரைட்டன் தலையால் முட்டி கோல் (90+5) அடித்தார்.
கூடுதல் நேரத்தின் முடிவில் பிரைட்டன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைட்டெட்டை வீழ்த்தியது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan