சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ஷிகர் தவான்!
25 ஆவணி 2024 ஞாயிறு 07:33 | பார்வைகள் : 8880
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
50 ஓவர் போட்டிகளில் 6,793 ஓட்டங்களை குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2,315 ஓட்டங்களை அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும்.
38 வயதாகும் ஷிகர் தவான் 2010 ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார்.
இறுதியாக 2022 ஒருநாள் போட்டியில் பங்களாதேஷிற்கு எதிராக விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.
டெஸ்ட் போட்டியில் 2018 ஆம் ஆண்டுக்குப் பின் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.
மேலும் இது குறித்து தவான் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "கடந்த கால நினைவுகளை மட்டுமே காணக்கூடிய எனது வாழ்க்கையில் நான் அந்த தருணத்தில் நிற்கிறேன். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு, அது நிறைவேறியது, அதற்காக நான் எனது குடும்பம், எனது பயிற்சியாளர்கள் தாரக் சின்ஹா மற்றும் மதன் ஷர்மா ஆகியோருக்கு நான் நன்றி கூறுகிறேன்” என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan