ஹமாஸ் படைகளின் சுரங்கப்பாதையில் பிரித்தானியரின் சடலம் - அதிர்ச்சி தகவல்
24 ஆவணி 2024 சனி 08:44 | பார்வைகள் : 6297
ஹமாஸ் படைகளின் சுரங்கப்பாதையில், துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிரித்தானியர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பிரித்தானியருடன் மேலும் ஐந்து இஸ்ரேலிய பணயக்கைதிகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
அனைவரும் காஸா பகுதியில் வைத்து படுகொலை செய்யப்படிருக்கலாம் என்றே முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவருகிறது.
நிலப்பரப்பில் இருந்து 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் இருந்து இஸ்ரேலிய படைகள் அந்த சடலங்களை மீட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை ஹமாஸ் சுரங்கப்பாதைக்குள் அதிரடியாக நுழைந்த இஸ்ரேலிய ராணுவம், சடலங்களுடன் ஹமாஸ் படைகளின் ஆயுதக் குவியலையும் மீட்டுள்ளது.
51 வயதான பிரித்தானியர் Nadav Popplewell கடந்த அக்டோபர் மாதம் நடந்த தாக்குதலில் ஹமாஸ் படைகளால் கைது செய்யப்பட்டார்.
இவரது சகோதரி பல மாதங்களாக இவரின் விடுதலைக்காக போராடி வந்துள்ளார்.
மேலும், நவம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட போர் நிறுத்த நடவடிக்கையின் போது 79 வயதான இவரது தாயார் விடுவிக்கப்பட்டார்.
இன்னொரு சகோதரர் அக்டோபர் தாக்குதலின் போது கொல்லப்பட்டார்.
தரவுகளின் அடிப்படையில், தற்போது 109 பேர்கள் ஹமாஸ் பிடியில் உள்ளனர்.
ஆனால் ஆய்வாளர்கள் தரப்பு தெரிவிக்கையில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan