நாளை இங்கிலாந்தில் ஏற்றப்படும் பரா-ஒலிம்பிக் தீபம்.. பிரான்சுக்கு வருகிறது..!

23 ஆவணி 2024 வெள்ளி 17:36 | பார்வைகள் : 12455
நாளை சனிக்கிழமை பரா ஒலிம்பிக் தீபம் இங்கிலாந்தில் வைத்து ஏற்றப்பட்டு பிரான்சுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
பரா ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், ஓகஸ்ட் 24 நாளை சனிக்கிழமை பிரித்தானியாவின் இலண்டன் நகருக்கு மிக அருகே இந்த ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, பின்னர் ஆங்கிலக்கால்வாயூடாக பிரான்சுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
பிரான்சின் 50 நகரங்களுக்கு இந்த தீபம் கொண்டு செல்லப்பட உள்ளது. பின்னர் ஆரம்ப நாள் நிகழ்வின் பின்னர் ஒலிம்பிக் போட்டிகளின் போலவே Tuileries Gardens பூங்காவில் உள்ள இராட்சத பலூனில் இந்த தீபம் காட்சிக்கு வைக்கப்படும். அதனை மக்கள் இலவசமாக பார்வையிடமுடியும்.
பரா ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடம் இலண்டன் என்பதால் அங்கிருந்து இந்த தீபம் ஏற்றப்பட்டு பிரான்சுக்கு கொண்டுவரப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1