நேபாளத்தில் கோர விபத்து - 14 பேர் பலி
23 ஆவணி 2024 வெள்ளி 15:19 | பார்வைகள் : 6677
நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி என்ற ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளது.
14 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி இந்தியர்கள் 40 பேர் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது தனாஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகேயுள்ள சாலையில் சென்ற போது பேருந்து சாரதி கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பயணிகள் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், மீட்புப்பணிகளை உள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.
நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் விழுந்த 16 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியர்களா? என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan